TNPSC Thervupettagam

FRB 20220610A ரேடியோ அலை வெடிப்பு

November 2 , 2023 390 days 264 0
  • பூமியை அடைய 8 பில்லியன் ஆண்டுகள் எடுத்துள்ள ரேடியோ அலைகளின் மர்மம் மிக்க வெடிப்பு நிகழ்வினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அதி விரைவான ரேடியோ வெடிப்பு நிகழ்வு என்பது இதுவரையில் கண்டறியப்படாத தொலைதூர மற்றும் ஆற்றல் மிக்க நிகழ்வாகும்.
  • FRB 20220610A என பெயரிடப்பட்ட இந்த வெடிப்பு நிகழ்வானது, ஒரு மில்லி வினாடிக்கும் குறைவான காலமே நீடித்தது.
  • ஆனால் அந்த ஒரு கணத்தில், அது கடந்த 30 ஆண்டுகளில் நமது சூரியனின் ஆற்றல் மிக்க உமிழ்வுகளுக்குச் சமமான அளவிலான உமிழ்வினை வெளியிட்டது.
  • வேகமான ரேடியோ அலை வெடிப்புகள், அல்லது FRB என்பது, எவ்வாறு உருவானது என்ற தகவல் ஏதும் கிடைக்கப்பெறாத தீவிரமான, மில்லி வினாடி கால அளவிலான தீவிர வெடிப்புகள் ஆகும்.
  • முதலாவது FRB வெடிப்பு நிகழ்வானது 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்