TNPSC Thervupettagam

FRBM சட்டம் மற்றும் கேரளா

April 1 , 2020 1610 days 666 0
  • நிதியியல் பொறுப்புடைமை மற்றும் நிதிநிலை மேலாண்மை (FRBM - Fiscal Responsibility and Budget Management) சட்டத்தின் கீழ் கேரளாவிற்குச் சலுகை வழங்குமாறு மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இது ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் அடுத்த நிதியாண்டில் மாநிலத்தின் நிதிநிலைமையானது மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் அடையாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • அவசர கால நிவாரணத் திட்டத்திற்கு நிதியளித்து உதவுவதற்காக, ஏப்ரல் மாதத்திலேயே சந்தையிலிருந்து ரூ.12,500 கோடி கடனைப் பெற கேரளா பரிந்துரைத்துள்ளது.
  • இந்தச் சட்டமானது பொதுவாக அறியப்படும் “விடுபடு பிரிவு” (escape clause) என்ற ஒன்றைக் கொண்டுள்ளது.

FRBM பற்றி

  • FRBM சட்டம், 2003 ஆனது நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக நிதியியல் ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தச் சட்டத்தின் நீண்ட கால நோக்கம் என்பது இந்தியாவிற்கான நிதியியல் நிலைத் தன்மையை அடைவது மற்றும் இந்தியாவில் பணவீக்கத்தைக் கையாளுவதற்காக ரிசர்வ் வங்கிக்குத் தேவையான அதிகாரங்களை வழங்குவது ஆகியவனவாகும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ், மத்திய அரசானது சிலபல காரணங்களைக் காரணம் காட்டி வருடாந்திர நிதிப்பற்றாக்குறை இலக்கை மீறலாம்.
  • தேசியப் பாதுகாப்பு, போர், தேசியப் பேரிடர், விவசாய நிலை சீர்குலைதல், அடிப்படைக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் முந்தைய 4 காலாண்டுகளின் சராசரி விகிதத்தை விட குறைந்தது 3 புள்ளிகள் குறைவாக தற்போதைய காலாண்டின் நேரடி வளர்ச்சிக் குறைவு ஆகியவை அதற்கான காரணங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்