#Fridayforfuture இயக்கத்தின் ஒரு பகுதியாக உலகெங்கிலும் உள்ள 123 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தனது முதலாவது பள்ளி வேலை நிறுத்தத்தை இந்தியா கண்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த மாணவர், காலநிலை ஆர்வலர் மற்றும் தற்பொழுது நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவரான கிரேட்டா துன்பெர்க் என்பவரால் இந்த இயக்கம் ஊக்கம் பெற்றது.
இவர் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அந்நாட்டுத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் போராட்டம் நடத்துகின்றார்.
இந்தியாவில் தேசியத் தலைநகர்ப் பகுதியான டெல்லியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.