இந்திய இராணுவத்திற்கும் பிரெஞ்சு இராணுவத்திற்கும் இடையிலான முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியான FRINJEX-23 கேரளாவின் பாங்கோடு இராணுவ மையத்தில் நடத்தப்பட்டது.
இரு நாடுகளும் ஒரு குழுவினை உள்ளடக்கிய ஒரு படைப்பிரிவுடன் இந்த வகையிலான பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பயிற்சியானது உத்திசார் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான இயங்குந் தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"ஒரு போட்டிமிக்கச் சூழலில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள்" என்ற கருத்துருவின் கீழ் இந்தப் பயிற்சியானது மேற்கொள்ளப் பட்டது.