சமீபத்தில் மத்திய அரசானது டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது அதிகரிக்கப்பட்டு வரும் கவனத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரை நிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆணையம் (FSDC - Financial Stability and Development Council) என்ற அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது.
FSDC ஆனது 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
இது மத்திய நிதி அமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது.
இதன் உறுப்பினர்கள் பின்வருமாறு
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
நிதித்துறை செயலாளர்/மத்தியப் பொருளாதார விவகாரங்கள் துறை
செயலாளர், நிதியியல் சேவைகள் துறை
தலைமைப் பொருளாதார ஆலோசகர், மத்திய நிதி அமைச்சகம்
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர்.