சோமாட்டோ மற்றும் ஸ்விகி உள்ளிட்ட இயங்கலை வழியிலான உணவு விநியோக தளங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட உள்ளது.
இது ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இணைய வழித் தளங்கள் ஆனது உணவுப் பொருட்களை அவை காலாவதியாகும் ஒரு காலத்திற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே விநியோகிக்க வேண்டும்.
சாத்தியமான உணவு மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களை தனித்தனியாக நுகர்வோருக்கு வழங்குவதன் பெரும் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்தியது.
அது "பல்வேறு மாநிலங்களின் உணவு ஆணையர்களை இணைய வழித் தளங்களால் பயன்படுத்தப்படும் கிடங்குகள் மற்றும் பிற வசதிகள் மீதான ஒரு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
கண்காணிப்பு மாதிரிச் சோதனைகளை அதிகரிக்கவும், மேலும் அதற்காக உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு வாகனங்களை நன்கு பயன்படுத்துமாறும் மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு கோரப்பட்டுள்ளது.