இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது (FSSAI – Food Safety and Security Authority of India) சந்தைகளில் உள்ள பாதுகாப்பு அற்றவை என கண்டறியப்படும் உணவுப் பொருட்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
FSSAI இத்தகு உணவுப் பொருட்கள் திரும்ப பெறுவதற்கான பொறுப்புகளை விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கே வழங்கியுள்ளது.
FSSAI ஆனது பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை சந்தைகளிலிருந்து திரும்ப பெறுதலை கண்காணிக்கும். மேலும் அத்தகு நடவடிக்கைகள் மூலம் உணவு நிறுவனங்களின் செயல்பாட்டை மதிப்பிடும்.
மேலும் திரும்பி பெறப்பட்ட உணவுப் பொருட்களின் அழிப்பையும் FSSAI உறுதி செய்யும்.