இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது சமீபத்தில் அதன் மூன்றாவது முனையத்தில் குறிப்பிட்ட பயணிகளுக்கான மிக விரைவான குடியேற்ற (உள்நுழைவு வசதி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நம்பகமான பயணிகள் விரைவான உள் நுழைவு ஏற்பாட்டுத் திட்டம் (FTI-TTP) ஆனது நம்பகமான பயணிகளின் சர்வதேசப் பயணங்களின் போது காத்திருப்புக் காலத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்கள் (OCI) அட்டை தாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் ஆனது குடியேற்றச் செயல்முறையை 15-20 நிமிடங்களில் இருந்து சில வினாடிகள் என்ற கால அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
FTI-TTP ஆனது வரும் மாதங்களில் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.