TNPSC Thervupettagam

FTI-TTP திட்டம்

September 27 , 2024 17 hrs 0 min 39 0
  • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது சமீபத்தில் அதன் மூன்றாவது முனையத்தில் குறிப்பிட்ட பயணிகளுக்கான மிக விரைவான குடியேற்ற (உள்நுழைவு வசதி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நம்பகமான பயணிகள் விரைவான உள் நுழைவு ஏற்பாட்டுத் திட்டம் (FTI-TTP) ஆனது நம்பகமான பயணிகளின் சர்வதேசப் பயணங்களின் போது காத்திருப்புக் காலத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்கள் (OCI) அட்டை தாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது குடியேற்றச் செயல்முறையை 15-20 நிமிடங்களில் இருந்து சில வினாடிகள் என்ற கால அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • FTI-TTP ஆனது வரும் மாதங்களில் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்