முழுமையாக அணுகக்கூடிய வசதி (வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்திய அரசின் நிறைவு தேதியிடப்பட்டப் பத்திரங்களில் முதலீடு செய்ய உதவும் வசதி (FAR)) தகுதி பெற்ற இந்திய அரசாங்கப் பத்திரங்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் FTSE நிறுவனத்தின் வளர்ந்து வரும் சந்தை அரசாங்கப் பத்திரக் குறியீட்டில் (EMGBI) சேர்க்கப்படும்.
மேலும், இந்தியப் பத்திரங்களானது பிராந்திய ரீதியிலான FTSE ஆசிய அரசாங்கப் பத்திரக் குறியீடு (AGBI) மற்றும் FTSE ஆசிய-பசிபிக் அரசாங்கப் பத்திரக் குறியீடு (APGBI) ஆகிய சிலவற்றில் சேர்க்கப்படும்.
JP மோர்கன் சேஸ் & கோ மற்றும் ப்ளூம்பெர்க் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியப் பத்திரங்களை உள்ளடக்கிய மூன்றாவது உலகளாவியப் பத்திரக் குறியீடு இதுவாகும்.
FAR வசதியின் கீழ் தகுதி பெற்ற மற்றும் பிற குறியீட்டுச் சேர்க்கை விதிகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து இந்திய அரசு பத்திரங்களும் இந்தக் குறியீட்டில் சேர்க்கப்படும்.
2024 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதிக்கு முன் வழங்கப்பட்ட 14 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் அசல் தவணைக்காலம் கொண்ட பத்திரங்கள் இதில் அடங்கும்.