அமெரிக்காவின் ஒரு சுயாதீனச் சிந்தனைக் களஞ்சியமான Future of Free Speech என்ற அமைப்பானது, 'Who in the World Supports Free Speech?' என்ற ஒரு தலைப்பிலான இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பேச்சுச் சுதந்திரத்திற்கான ஆதரவு குறித்த கேள்வி தொடர்பாக கணக்கெடுக்கப்பட்ட 33 நாடுகளில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்தது.
இந்தக் குறியீட்டில் நார்வே மற்றும் டென்மார்க் முதலிடத்தில் உள்ளன.
இந்தோனேசியா (56.8), மலேசியா (55.4), மற்றும் பாகிஸ்தான் (57.0) ஆகியவை இதில் மதிப்பெண்களின் அடிப்படையில் மிகப்பெரியதொரு அளவில் முன்னேற்றங்களைக் கொண்டு உள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2021 ஆம் ஆண்டிலிருந்து பேச்சுச் சுதந்திர ஆதரவில் சரிவைக் கண்டுள்ளன.