ஃப்ளையிங் வெட்ஜ் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட FWD 200B எனப்படும் ஒரு போர்ப் பயன்பாட்டு ஆளில்லா வான்வழி வாகனத்தினை (UAV) அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்பட்ட நுட்பத்திலான போர்ப் பயன்பாட்டு ஆளில்லா விமானங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைவதால், இது ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது.
FWD 200B என்ற குண்டுவீச்சு விமானமானது ஒரு நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் இயங்கக் கூடிய (MALE) போர்ப் பயன்பாட்டு ஆளில்லா விமானம் (UCAV) என வகைப் படுத்தப் பட்டுள்ளது.
இது அதிகபட்சமாக 102 கிலோ வரையிலான எடையும் (MTOW) 30 கிலோ வரையிலான எடையினைச் சுமந்து செல்லும் திறனும் கொண்டது.
இந்த UAV ஆனது சுமார் 12,000 அடி உயரத்தில் இயங்குகிறது என்பதோடு இது 15,000 அடி உயரம் வரை அடையலாம்.