FY22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி
September 3 , 2021 1180 days 566 0
ஜுன் 2021 வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சாதனை உச்சத்தை எட்டியது எனப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் காலாண்டில் ஏற்பட்ட 24.4% சரிவுடன் ஒப்பிடுகையில் அதே கால கட்டத்திலான 2021 ஆம் ஆண்டின் 3 மாத காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 20.1% ஆக உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகிறது.
காலாண்டு ரீதியிலான தரவுகள் வெளியிடப்பட தொடங்கியது முதல் இன்று வரையில் இதுவே இந்தியாவின் மிக வேகமான வளர்ச்சியாகும்.
இந்த வளர்ச்சியானது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பை (21.4%) விட சற்று குறைவானதேயாகும்.