TNPSC Thervupettagam

G-20 அமைப்பின் பேச்சுவார்த்தை நாடுகள் - பருவநிலை மாற்றம் குறித்த தடை

August 9 , 2023 346 days 193 0
  • ஜூலை மாதத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்த G-20 அமைப்பு நாடுகளின் இரண்டு அமைச்சர்கள் கூட்டங்களுக்குப் பிறகு இது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
  • உமிழ்வு இலக்குகள், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டினைக் குறைத்தல் மற்றும் பருவநிலை நிதி உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளுக்கான கூட்டு உறுதியேற்பு எதுவும் இல்லாமல் இக்கூட்டம் நிறைவுற்றது.
  • “ஆரம்ப கட்ட வரைவு” அல்லது தலைவர்களின் பிரகடனத்தின் முதல் வரைவு மீதான காணொளி வாயிலான பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகளில் பல்வேறு கருத்தியல் வேறுபாடுகள் ஏற்பட்டன.
  • முதல் கூட்டம் ஆனது கோவாவில் நடைபெற்ற G-20 அமைப்பு நாடுகளின் ஆற்றல் மாற்றச் செயற்குழு குழுவின் சந்திப்பு (ETWG) ஆகும்.
  • அதைத் தொடர்ந்து G-20 அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத் தன்மை செயற்குழு கூட்டம் ஆனது (ECSWG) சென்னையில் நடைபெற்றது.
  • இந்தியாவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட வேண்டிய உலகளாவிய உமிழ்வு இலக்குகள் மற்றும் 2035 ஆம் ஆண்டில் (2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது) நிறைவு செய்யப்பட வேண்டிய 60% உமிழ்வு குறைப்பு ஆகியவை மீது உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
  • இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் 2035 ஆம் ஆண்டில் உமிழ்வினைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டினை ஏற்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்