TNPSC Thervupettagam

G-20 அமைச்சரவை மட்டத்திலான சந்திப்பு

June 9 , 2019 1902 days 619 0
  • வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மீதான G-20 அமைச்சரவை மட்டத்திலான சந்திப்பு ஜப்பானிய நகரான சுகுபாவில் நடத்தப்பட்டது.
  • G-20-ல், தனது முதலாவது சுழல் முறையிலான தலைவர் பதவியை ஜப்பான் ஏற்றது.
  • G-20-ன் தற்போதைய தலைவர் சின்சோ அபே ஆவார்.
  • இந்தச் சந்திப்பின் போது டிஜிட்டல் மயமாக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் அனைவரையும் உள்ளடக்கிய, புத்தாக்கத் தன்மை மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட எதிர்கால சமுதாயமான “சமூகம் 5.0” ஆகியவற்றை அடைய அது எவ்வாறு உதவும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
G-20 பற்றி
  • G-20 (20 நாடுகள் கொண்ட ஒரு குழு) என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைச் சேர்ந்த அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான ஒரு சர்வதேச மன்றமாகும்.
  • இது 1999 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • G-20 பொருளாதாரம் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கின்றது: மொத்த உலக உற்பத்தியில் 90%
    • உலக வர்த்தகத்தில் 80 சதவிகிதம் (அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், 75%)
    • உலக மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு மடங்கு
    • உலக நிலப்பரப்பில் ஏறத்தாழ பாதியளவு நிலப்பரப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்