TNPSC Thervupettagam

G-20 நாடுகள் கூட்டமைப்பின் புதிய இந்திய பிரதிநிதி

November 29 , 2017 2581 days 849 0
  • பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளரான ஸ்ரீசக்தி காந்த தாஸ் G-20 நாடுகள் கூட்டமைப்பின் வளர்ச்சி பிரிவின்  (Development track) இந்தியப் பிரதிநிதியாக (Sherpa) டிசம்பர் 31, 2018 வரை நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • G-20 அமைப்பில் இரு பிரிவுகள் (tracks) உள்ளன.
    • வளர்ச்சிப் பிரிவு (Development Track)
    • நிதிப் பிரிவு (Finance Track)
  • நிதிப் பிரிவினை G-20க்கான இந்தியாவின் இணை பிரதிநிதி என்ற வகையில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளரால் நிர்வகிக்கப்படும்.
  • வளர்ச்சி  பிரிவானது  G-20 கூட்டமைப்புக்கான  இந்திய பிரதிநிதியால் (Sherpa) ஒருங்கிணைக்கப்படும்.
  • இந்திய பிரதிநிதிக்குத் தேவையான உதவிகளை மத்திய பொருளாதார விவகாரத்துறை அளிக்கும்.
  • Sherpa என்பது G-8, G-20, NSG போன்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் தனிப்பட்ட பிரதிநிதிகளாவர்.
  • 2015 செப்டம்பரில் நடைபெற்ற G-20 நாடுகளின் பேச்சுவார்த்தையில் நிதி ஆயோக்கின் அரவிந்த் பனகாரியா சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
  • இதற்கு முந்தைய கூறுகளின் படி G-20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடுகளில் முன்பு  செயல்பட்டு வந்த திட்டக்குழுவின் துணை தலைவர் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்