பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளரான ஸ்ரீசக்தி காந்த தாஸ் G-20 நாடுகள் கூட்டமைப்பின் வளர்ச்சி பிரிவின் (Development track) இந்தியப் பிரதிநிதியாக (Sherpa) டிசம்பர் 31, 2018 வரை நியமிக்கப்பட்டு உள்ளார்.
G-20 அமைப்பில் இரு பிரிவுகள் (tracks) உள்ளன.
வளர்ச்சிப் பிரிவு (Development Track)
நிதிப் பிரிவு (Finance Track)
நிதிப் பிரிவினை G-20க்கான இந்தியாவின் இணை பிரதிநிதி என்ற வகையில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளரால் நிர்வகிக்கப்படும்.
வளர்ச்சி பிரிவானது G-20 கூட்டமைப்புக்கான இந்திய பிரதிநிதியால் (Sherpa) ஒருங்கிணைக்கப்படும்.
இந்திய பிரதிநிதிக்குத் தேவையான உதவிகளை மத்திய பொருளாதார விவகாரத்துறை அளிக்கும்.
Sherpa என்பது G-8, G-20, NSG போன்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் தனிப்பட்ட பிரதிநிதிகளாவர்.
2015 செப்டம்பரில் நடைபெற்ற G-20 நாடுகளின் பேச்சுவார்த்தையில் நிதி ஆயோக்கின் அரவிந்த் பனகாரியா சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முந்தைய கூறுகளின் படி G-20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடுகளில் முன்பு செயல்பட்டு வந்த திட்டக்குழுவின் துணை தலைவர் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படுவார்.