G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வின் தலா விகித மாற்றங்கள்
September 10 , 2023 441 days 234 0
உலக எரிசக்தி ஆலோசனை வழங்கீட்டுக் குழுமமான ‘எம்பர்’ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தூய மின்சார ஆற்றலை நோக்கிய உலக நாடுகளின் மாற்றத்தை எடுத்து உரைக்கிறது.
G20 அமைப்பின் சில உறுப்பினர் நாடுகள் 2015 ஆம் ஆண்டிலிருந்து நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வின் தலா விகிதத்தினை குறைத்துள்ளன.
இருப்பினும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடச் செய்கையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வின் தலா விகிதம் 29% அதிகரித்துள்ளது.
G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒட்டுமொத்தமாக, நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வில் 9% உயர்வை எதிர்கொண்டுள்ளன.
அவை 2022 ஆம் ஆண்டில் 1.6 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வின் அளவில் தலா விகிதத்தினை எட்டியுள்ளன.
G20 அமைப்பின் நாடுகளானது, உலக நாடுகளின் மின் துறையின் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் தோராயமாக 80% பங்கினைக் கொண்டுள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகியவை நிலக்கரி சார்ந்த மாசுபாட்டில் உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிக அளவு பாங்குடன் முன்னணியில் உள்ளதையடுத்து, மிக மோசமான அளவில் மாசுபாட்டினை ஏற்படுத்தும் நாடுகளாக குறிப்பிடப்பட்டன.
2015 ஆம் ஆண்டு முதல் இந்த இரு நாடுகளும் தங்களின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வினை தலா விகிதங்களை முறையே 26% மற்றும் 10% வரை குறைத்துள்ளன.
அதே காலகட்டத்தில் சீனாவின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வு தலா விகிதம் 30% அதிகரித்துள்ளது.