TNPSC Thervupettagam

G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வின் தலா விகித மாற்றங்கள்

September 10 , 2023 313 days 180 0
  • உலக எரிசக்தி ஆலோசனை வழங்கீட்டுக் குழுமமான ‘எம்பர்’ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது தூய மின்சார ஆற்றலை நோக்கிய உலக நாடுகளின் மாற்றத்தை எடுத்து உரைக்கிறது.
  • G20 அமைப்பின் சில உறுப்பினர் நாடுகள் 2015 ஆம் ஆண்டிலிருந்து நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வின் தலா விகிதத்தினை குறைத்துள்ளன.
  • இருப்பினும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடச் செய்கையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வின் தலா விகிதம் 29% அதிகரித்துள்ளது.
  • G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒட்டுமொத்தமாக, நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வில் 9% உயர்வை எதிர்கொண்டுள்ளன.
  • அவை 2022 ஆம் ஆண்டில் 1.6 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வின் அளவில் தலா விகிதத்தினை எட்டியுள்ளன.
  • G20 அமைப்பின் நாடுகளானது, உலக நாடுகளின் மின் துறையின் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் தோராயமாக 80% பங்கினைக் கொண்டுள்ளன.
  • ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகியவை நிலக்கரி சார்ந்த மாசுபாட்டில் உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிக அளவு பாங்குடன் முன்னணியில் உள்ளதையடுத்து, மிக மோசமான அளவில் மாசுபாட்டினை ஏற்படுத்தும் நாடுகளாக குறிப்பிடப்பட்டன.
  • 2015 ஆம் ஆண்டு முதல் இந்த இரு நாடுகளும் தங்களின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வினை தலா விகிதங்களை முறையே 26% மற்றும் 10% வரை குறைத்துள்ளன.
  • அதே காலகட்டத்தில் சீனாவின் நிலக்கரி சார் மின் உற்பத்தி உமிழ்வு தலா விகிதம் 30% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்