TNPSC Thervupettagam

G20 அமைப்பின் எண்ணிமப் புத்தாக்க கூட்டணி (G20-DIA)

January 2 , 2023 567 days 357 0
  • இது G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகளில் அமைந்த புத்தொழில் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட புதுமையான மற்றும் நேர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான எண்ணிமத் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, அங்கீகரித்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பங்கள் வேளாண்மை, சுகாதாரம், கல்வி, நிதி, பாதுகாப்பான எண்ணிம உள்கட்டமைப்பு மற்றும் சுழற்சிமுறைப் பொருளாதாரம் ஆகிய 6 பரந்த கருப்பொருள்களில் காணப்படும் மனிதகுலத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • இந்த கருப்பொருள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் எண்ணிமப் பொதுப் பொருட்கள் உள்கட்டமைப்பு வசதி மூலம் செயல்படுத்தப்படும்.
  • பெங்களூருவில் நடைபெற்ற எண்ணிமப் பொருளாதாரச் செயற்குழு (DEWG) கூட்டத்தின் ஒரு பகுதியாக, G20 அமைப்பின் எண்ணிமப் புத்தாக்கக் கூட்டணியின் (G20-DIA) உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்