TNPSC Thervupettagam

G20 அமைப்பின் EMPOWER தொழில்நுட்பச் சமவாய்ப்பு - எண்ணிம உள்ளடக்கத்திற்கான இணைய தளம்

August 13 , 2023 343 days 169 0
  • இந்திய நாட்டு அரசானது தொழில்நுட்பச் சமவாய்ப்பு - எண்ணிம உள்ளடக்கத்திற்கான இணைய தளத்தைத் தொடங்க உள்ளது.
  • G20 EMPOWER உச்சி மாநாடானது பாலின அடிப்படையில் நிலவும் எண்ணிம இடைவெளியினை நிரப்பும் நோக்கில் காந்தி நகரில் நடைபெற்றது.
  • இந்த தளமானது 120க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கப் பெறுவதோடு, மேலும், G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளில் வாழும் பெண்களுக்கு எண்ணிமத் திறன் சார்ந்த கல்விப் படிப்புகளையும் வழங்குகிறது.
  • அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தளத்திற்கு இந்தியா அரசினால் நிதியளிக்கப்பட உள்ளது.
  • இது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பினால் நன்கு நிர்வகிக்கப் பட உள்ளது.
  • இந்த உச்சி மாநாடானது, ‘பெண்கள் தலைமையிலான மேம்பாடு: நிலையான, மிகவும் உள்ளார்ந்த மற்றும் சமமான உலகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல்’ என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • EMPOWER என்பது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட G20 அமைப்பின் பெண்களின் பொருளாதாரப் பிரதிநிதித்துவத்திற்கான அதிகாரமளித்தல் மற்றும் முன்னேற்றத்தின் மீதான ஒரு கூட்டணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்