TNPSC Thervupettagam

G20 காணொளி மாநாடு

March 28 , 2020 1611 days 556 0
  • G20 அமைப்பின் காணொளி மாநாடானது சவுதி அரசரான சல்மான் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.
  • G20 அமைப்பில் ஒரு உறுப்பினர் நாடாக உள்ள இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • இந்த மாநாட்டில், 5 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்டி உலகப் பொருளாதாரத்திற்குச் செலவிட இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
  • ஒரு மாநாட்டில் காணொளியின் மூலம் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்வது இந்த வகையில் இதுவே முதன் முறையாகும்.
  • G20 மாநாடானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் தலைமையின் கீழ் நடக்க இருந்தது.
  • சவுதி அரேபியாவானது “21ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்து கொள்ளுதல்” என்ற கருத்துருவை இந்த மாநாட்டிற்காகத் தேர்ந்தெடுத்து உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு G20 மாநாட்டிற்காக ஸ்பெயின், ஜோர்டான், சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அழைப்பாளர் நாடுகளாக பங்கேற்றுள்ளன.

G20 பற்றி

  • G20 மாநாடு என்பது மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு வருடாந்திரச் சந்திப்பாகும்.
  • இதன் உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் தொகையையும் கொண்டுள்ளன.
  • முன்னதாக G20 மாநாடானது “நிதியியல் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்த மாநாடு” என்று அழைக்கப் பட்டது.
  • இந்த அமைப்பானது தனக்கேயுரிய நிரந்தரமான பணியாளர்களைக் கொண்டிருக்க வில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் G20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் ஒரு பிராந்தியச் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன.
  • 1997 – 1998 ஆம் ஆண்டின் ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, G7 அமைப்பின் நிதித்துறை அமைச்சர்கள் 1999 ஆம் ஆண்டில் G20 நிதியியல் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க ஒப்புக் கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்