TNPSC Thervupettagam

G20 நாடுகளின் சர்வதேச வரி சார் கூட்டுறவு

August 9 , 2024 106 days 166 0
  • G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் சந்திப்பானது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது.
  • இது சர்வதேச வரி சார் கூட்டுறவிற்கான தனித்துவமான வரிப் பிரகடனத்தை வெளியிட்டது.
  • ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்காகவும், நியாயமான மற்றும் முற்போக்கான வரிவிதிப்பு முறைகளை மேம்படுத்துவதற்காகவும் பல G20 உறுப்பினர் நாடுகளால் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு வரிச் சீர்திருத்தங்களை இந்தப் பிரகடனம் நன்கு பாராட்டுகிறது.
  • சக ஆதரவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் உள்நாட்டுச் சீர்திருத்தங்களை மிகவும் வலுப்படுத்துவதற்கான உறுதியேற்பும் இதில் அடங்கும்.
  • இணைய சங்கேதப் பணம் சார் சொத்துக்கள் குறித்த அறிக்கையிடல் கட்டமைப்பினை (CARF) விரைவாகச் செயல்படுத்துவதற்கும், அதிகார வரம்புகள் விதிப்பின் மூலம் பொதுவான அறிக்கையிடல் தரநிலையில் (CRS) ஒரு திருத்தம் செய்வதற்கும் இந்தப் பிரகடனம் அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்