TNPSC Thervupettagam
July 1 , 2019 1880 days 1430 0
  • 14வது G20 மாநாடானது ஜப்பானின் ஒசாகா நகரத்தில் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
  • G20 உறுப்பினர்களில் அமெரிக்காவைத் தவிர ஏனைய 19 உறுப்பினர்களும் பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தின் முழு அமலாக்கத்தின் மீதான அவர்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் பரந்த அளவிலான பசுமைத் தொழில்நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகளை நோக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • G20 நாடுகளின் தலைவர்கள் உலகளாவிய அளவிலான முக்கியப் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கான “ஒசாகா பிரகடனத்தை” வெளியிட்டனர்.
  • இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஜப்பான் - அமெரிக்கா – இந்தியா (JAI / Japan-America - India) ஆகிய நாடுகளுக்கிடையேயான முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஒசாகாவில் நடைபெற்றது.
  • அதேபோல் ரஷ்யா - இந்தியா- சீனாவிற்கு (RIC / Russia – India - China) இடையேயான முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
  • ஜப்பானியப் பிரதமரான ஷின்ஸோ அபேவால் அறிவிக்கப்பட்ட “ஒசாகா பாதை” என்ற அறிக்கைக்கு 24 நாடுகள் மற்றும் குழுக்கள் கையொப்பமிட்டன.
  • இந்தியா, இந்தோனேசியா, எகிப்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இதில் கையொப்பமிடவில்லை.
  • “ஒசாகா பாதை” என்பது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புகளுடன் எல்லைத் தாண்டிய தரவு ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாகும்.
  • இந்த மாநாடானது கீழ்க்காணும் 8 கருத்துருக்களின் கீழ் நடைபெற்றது.
1. உலகளாவிய பொருளாதாரம் 5. வேலைவாய்ப்பு
2. வர்த்தகம் மற்றும் முதலீடு 6. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
3.புத்தாக்கம் 7. வளர்ச்சி
4. சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் 8.சுகாதாரம்
  • முதல் G20 மாநாடானது 1999 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.
  • G20 மாநாடானது “நிதியியல் சந்தைகள் மற்றும் உலகப் பொருளாதாரம் மீதான மாநாடு” என பொதுவாக அறியப்படுகிற்து.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்