G20 அமைப்பின் EMPOWER தொழில்நுட்பச் சமவாய்ப்பு - எண்ணிம உள்ளடக்கத்திற்கான இணைய தளம்
August 13 , 2023 471 days 219 0
இந்திய நாட்டு அரசானது தொழில்நுட்பச் சமவாய்ப்பு - எண்ணிம உள்ளடக்கத்திற்கான இணைய தளத்தைத் தொடங்க உள்ளது.
G20 EMPOWER உச்சி மாநாடானது பாலின அடிப்படையில் நிலவும் எண்ணிம இடைவெளியினை நிரப்பும் நோக்கில் காந்தி நகரில் நடைபெற்றது.
இந்த தளமானது 120க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கப் பெறுவதோடு, மேலும், G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளில் வாழும் பெண்களுக்கு எண்ணிமத் திறன் சார்ந்த கல்விப் படிப்புகளையும் வழங்குகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தளத்திற்கு இந்தியா அரசினால் நிதியளிக்கப்பட உள்ளது.
இது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பினால் நன்கு நிர்வகிக்கப் பட உள்ளது.
இந்த உச்சி மாநாடானது, ‘பெண்கள் தலைமையிலான மேம்பாடு: நிலையான, மிகவும் உள்ளார்ந்த மற்றும் சமமான உலகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல்’ என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
EMPOWER என்பது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட G20 அமைப்பின் பெண்களின் பொருளாதாரப் பிரதிநிதித்துவத்திற்கான அதிகாரமளித்தல் மற்றும் முன்னேற்றத்தின் மீதான ஒரு கூட்டணியாகும்.