G20 அமைப்பின் எண்ணிமப் புத்தாக்க கூட்டணி (G20-DIA)
January 2 , 2023 567 days 355 0
இது G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகளில் அமைந்த புத்தொழில் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட புதுமையான மற்றும் நேர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான எண்ணிமத் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, அங்கீகரித்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்கள் வேளாண்மை, சுகாதாரம், கல்வி, நிதி, பாதுகாப்பான எண்ணிம உள்கட்டமைப்பு மற்றும் சுழற்சிமுறைப் பொருளாதாரம் ஆகிய 6 பரந்த கருப்பொருள்களில் காணப்படும் மனிதகுலத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்த கருப்பொருள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் எண்ணிமப் பொதுப் பொருட்கள் உள்கட்டமைப்பு வசதி மூலம் செயல்படுத்தப்படும்.
பெங்களூருவில் நடைபெற்ற எண்ணிமப் பொருளாதாரச் செயற்குழு (DEWG) கூட்டத்தின் ஒரு பகுதியாக, G20 அமைப்பின் எண்ணிமப் புத்தாக்கக் கூட்டணியின் (G20-DIA) உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.