TNPSC Thervupettagam

G20 ஒகாயாமா சுகாதார அமைச்சர்கள் மாநாடு

October 30 , 2019 1760 days 553 0
  • ஜப்பானில் இரண்டு நாட்கள் நடைபெற்ற G20 ஒகாயாமா சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • அவர் துடிப்பான இந்தியா இயக்கம், சரியான உணவினை உண் எனும் பிரச்சாரங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொண்டுள்ள சாதனைகள் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டினார்.
  • இச்சந்திப்பின் போது நான்கு மிக முக்கிய உலகளாவிய சுகாதார விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.  அவையாவன
    • அனைவருக்குமான சுகாதாரச் சேவையை அடைதல்
    • வயதான மக்களின் குறைகளைக் கேட்டறிதல்
    • சுகாதார அபாயங்களைக் கட்டுக்குள் வைத்தல்
    • நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அதன் கட்டுப்பாடு உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த  பாதுகாப்பு மேலாண்மை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்