TNPSC Thervupettagam

G20 தொழில்நுட்பப் போட்டி 2023 வெற்றியாளர்கள்

September 9 , 2023 297 days 417 0
  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச நிதிசார் தீர்வு முறை புத்தாக்க மையம் ஆகியவை இணைந்து நான்காவது G20 தொழில்நுட்பப் போட்டியினைத் தொடங்கின.
  • இந்த உலகளாவிய போட்டியானது, உலகெங்கிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்களை ஒரு முக்கியமான உலகளாவியப் பொருளாதாரத் தேவையாக உள்ள உலக நாடுகளுக்கு இடையேயான பண வழங்கீடுகளை மேம்படுத்தச் செய்வதற்கான முன்னோடியான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்தது.
  • விருது பெறும் புத்தாக்க கண்டுபிடிப்புகள்:
    • பண மோசடி எதிர்ப்பு /தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் / பொருளாதாரத் தடைகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் - செக்ரேட்டரியம் லிமிடெட், ஐக்கியப் பேரரசு,
    • அந்நியச் செலாவணி மற்றும் பணப்புழக்கம் சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகள் - மில்லிசென்ட் லேப்ஸ், ஐக்கியப் பேரரசு.
    • பலதரப்பு நாடுகளுக்கிடையேயான மத்திய வங்கி எண்ணிம நாணய இயங்கு தளங்களுக்கான தொழில்நுட்ப தீர்வுகள் - நாக்ஸ் வலையமைப்புகள், அமெரிக்கா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்