TNPSC Thervupettagam

G20 நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்

September 15 , 2023 311 days 188 0
  • G20 மாநாட்டில் தங்கள் நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தச் செய்யும் அரசத் தலைவர்களுக்கு பிரதமர் அவர்கள் சிறப்புப் பரிசினை வழங்கினார்.
  • இதில் இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனின் உள்ளார்ந்தத் தன்மையினைப் பிரதிபலிக்கும் கைவினைப்பொருட்கள் மற்றும் அந்தத் தயாரிப்புகள் அடங்கும்.
  • இதில்:
    • பித்தளைத் தகடு பதிக்கப்பட்ட இந்திய ரோஸ்வுட் பேழை: இந்தப் பேழையானது (பெட்டி) இந்திய ரோஸ்வுட் மரத்தினைப் பயன்படுத்தி கைவினை கலையால் வடிவமைக்கப்பட்டது.
    • காஷ்மீரி குங்குமப்பூ: இந்தக் குங்குமப்பூ வகையானது (பாரசீக மொழியில் 'சாஃப்ரான்', இந்தி மொழியில் 'கேசர்') உலகின் மிக விலையுயர்ந்த நறுமண உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.
    • பெக்கோ டார்ஜிலிங் மற்றும் நீலகிரி தேயிலை
    • அரக்குப் பள்ளத்தாக்கு காபி
    • சுந்தரவன காடுகளிலிருந்து பெறப்பட்ட தேன்
    • காஷ்மீரி பஷ்மினா சால்வைகள்: ‘பாஷ்ம்’ என்பது கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் காணப்படும் பகுதியில் வாழும் சாங்தாங்கி ஆட்டிலிருந்து பெறப்பட்ட (ஒரு காஷ்மீர் ஆடு) நூற்கப்படாத கம்பளியைக் குறிக்கிறது.
    • ஜிக்ரானா வாசனை திரவியம்: 'இட்டார்' ('வாசனை திரவியம்' என்று பொருள்) என்பது தாவரவியல் மூலங்களிலிருந்து பெறப்பட்ட வாசனை எண்ணெய் ஆகும்.
    • காதி தோள்பட்டை துணி
    • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினைக் குறிக்கும் வகையிலான நினைவு முத்திரைகள் மற்றும் நாணயங்களைக் கொண்ட நாணயப் பெட்டி ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்