TNPSC Thervupettagam

G20 நாடுகளுக்கான செயற்கைக்கோள் திட்டம்

September 14 , 2023 312 days 214 0
  • சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக் கண்காணிப்பிற்கான G20 நாடுகளுக்கான செயற்கைக் கோள் திட்டத்தினைத் தொடங்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • இது உலகின் தெற்கு நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் பருவநிலை மற்றும் வானிலைத் தரவுகள் அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக உலகின் தெற்கு நாடுகளுடனும் பகிரப்படும்.
  • முன்னதாக, சார்க் (SAARC) அமைப்பு நாடுகளின் நலனுக்காக இந்தியா 2017 ஆம் ஆண்டில் ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.
  • இது SAARC நாடுகளுக்கான செயற்கைக்கோள் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
  • இது இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கான ஒரு முன்னுரிமைக் கொள்கையின்‘ ஒரு பகுதி ஆகும்.
  • இது தெற்காசிய அண்டை நாடுகளுக்குத் தொலைபேசி வழியான மருத்துவச் சேவை, கல்விச் சேவை, வங்கி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை வாய்ப்புகள் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்