ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 19வது G20 உச்சி மாநாடு ஆனது ரியோ பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுடன் நிறைவு பெற்றது.
பிரேசில் நாட்டின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த ஆண்டு G20 உச்சி மாநாட்டின் கருத்துரு, 'Building a Just World and a Sustainable Planet' என்பதாகும்.
UNFCCC கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில முன்னேற்றங்கள் மற்றும் பாரீஸ் உடன்படிக்கைக்கான G20 நாடுகளின் ஒரு பெரும் உறுதிப்பாட்டை இந்தப் பிரகடனம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.
இந்தப் பிரகடனமானது, அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜானின் பாகு என்னுமிடத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை பேச்சுவார்த்தையானது பல சிக்கல்களைத் தீர்க்க தவறியது குறித்து இந்த உச்சி மாநாடு எடுத்துக்காட்டியது.
உலகளாவியச் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்காக பில்லியனர்களுக்கு வரி விதிக்குமாறு பிரேசில் முன்மொழிந்தது.
2030 ஆம் ஆண்டில் சுமார் 500 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவதை இலக்காகக் கொண்டு வறுமை மற்றும் பட்டினி நிலைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியையும் இது தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஜோ பிடன் அமேசான் காட்டிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையினைப் பெற்றார்.