G7 அமைப்பின் உறுப்பினராக உள்ள முக்கிய ஜனநாயக நாடுகளின் ஆற்றல் அமைச்சர்கள் 2030 ஆம் ஆண்டுகளின் முதல் பாதியில் மின் உற்பத்தியில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த ஒப்புக் கொண்டனர்.
ஜெர்மனி தனது சட்டத்தில் கடைசியாக 2038 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி ஆலைகளை மூடுவதற்கான இறுதி இலக்கை நிர்ணயித்துள்ளது அதே நேரத்தில் ஜப்பான் நாடானது அதற்கான நாளை நிர்ணயிக்கவில்லை.
நிலக்கரி பயன்பாடு குறித்த ஒப்பந்தம் ஆனது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை குறித்த 28வது பங்குதாரர்கள் மாநாட்டின் (COP28) படி புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டினைப் படிப்படியாக அகற்றுவதற்கான திசையில் ஒரு குறிப்பிடத் தக்கப் படிநிலையைக் குறிக்கிறது.