TNPSC Thervupettagam
June 13 , 2018 2357 days 4083 0
  • G-7 அமைப்பின் 44-வது மாநாடு அண்மையில் கனடா நாட்டின் க்யூபெக் நகரின் லா மல்பய்யே-வில் நடைபெற்றது.
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கனடா மீதான சாடல் மற்றும் இவ்வமைப்பில் உள்ள அனைத்து நாடுகளாலும் கையெழுத்திடப்பட்ட, கூட்டு அறிக்கைக்கான தன்னுடைய ஆதரவினை திடீரென திரும்பப் பெறல் போன்றவற்றினால் இம்மாநாடானது முழுமையாக சீரற்ற நிலையில் முடிவடைந்துள்ளது.
  • மற்ற நாடுகளிடமிருந்து ட்ரம்பின் தனிமைப்படுத்தலால், G7 அமைப்பு G6 மற்றும் ஒன்று என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.

  • இந்த மாநாடானது வர்த்தக வரி விதிப்பு பிரச்சனைகள் மீதான வேறுபாடு மற்றும் மீண்டும் இவ்வமைப்பில் இரஷ்யாவை சேர்த்து கொள்வதற்கான அழைப்பு ஆகியவற்றால் அதனுடைய நோக்கத்தை எட்டாது திசை மாற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வருடத்தின் G7 மாநாட்டின் ஐந்து கருத்துருக்களாவன:
    • உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி
    • பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளிப்பு
    • உலகப் பாதுகாப்பு
    • எதிர்காலத்தின் வேலை வாய்ப்புகள்
    • பருவநிலை மாறுபாடு மற்றும் பெருங்கடல்கள்
  • G-7 அமைப்பின் நடப்பு தலைவராக கனடா உள்ளது. மேலும் கனடாவே 2018 ஆம் ஆண்டின் G7 மாநாட்டை நடத்தும் ஒருங்கிணைப்பு நாடும் ஆகும்.
  • 2019-ஆம் ஆண்டிற்கான G-7 மாநாடானது பிரான்ஸ் நாட்டின் நவ்வெல்லே - அக்யூய்டெய்னின் (Nouvelle-Aquitaine) பியாராட்ஜ் (Biarritz) நகரில் நடைபெற உள்ளது. மேலும் அவ்வாண்டு G-7 அமைப்பின் தலைமைப் பொறுப்பு தானாக பிரான்சிடம் சென்றிடும்.
  • 2017ஆம் ஆண்டிற்கான G7 மாநாடானது இத்தாலியால் நடத்தப்பட்டது.
  • G7 அமைப்பானது உலகின் மிக தொழிற்மயமான, வளர்ந்த மேம்பட்ட பொருளாதாரமுடைய 7 நாடுகளின் குழுவினை உள்ளடக்கிய அமைப்பாகும்.
  • G7 அமைப்பில் உள்ள ஏழு நாடுகளாவன
    • அமெரிக்கா
    • இங்கிலாந்து
    • கனடா
    • பிரான்ஸ்
    • ஜெர்மனி
    • இத்தாலி
    • ஜப்பான்
  • இந்த நாடுகள் ஆண்டுதோறும் சந்திக்கின்றன. உலகின் முக்கிய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கின்றன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்