2023 ஆம் ஆண்டில், G7 அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் G7 உச்சி மாநாட்டினை நடத்த உள்ளது.
G7 என்பது தொழில்மயமாக்கப்பட்ட முன்னணி நாடுகளின் முறைசாராக் குழுவாகும்.
இது கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டிற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு என்று ஆஸ்திரேலியா, பிரேசில், கொமரோஸ், குக் தீவுகள், இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1975 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் கொண்ட ஒரு குழுவாக இருந்த இந்த அமைப்பின் முதலாவது உச்சி மாநாட்டினைப் பிரான்சு நடத்தியது.