TNPSC Thervupettagam

G7 அமைப்பின் விரிவாக்கம்

June 3 , 2020 1545 days 638 0
  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் G7 அமைப்பில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • உண்மையில் G8 ஆக இருந்த G7 அமைப்பானது ஒரு முறைசாரா மன்றமாக 1975 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. இது உலகின் முன்னணித் தொழில்துறை நாடுகளின் தலைவர்களை ஒன்றிணையச் செய்கின்றது.
  • இந்த அமைப்பில் ஓர் உறுப்பு நாடாக ரஷ்யா 1998ல் இணைந்தது. அதன் பிறகு இந்த அமைப்பு G8 என்றானது.
  • ரஷ்யப் படைகள் 2014 ஆம் ஆண்டில் கிழக்கு உக்ரைனில் நுழைந்து கிரீமியாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இதர G8 நாடுகள் இது குறித்து விமர்சிக்கத் தொடங்கின.
  • இந்த அமைப்பில் உள்ள இதர நாடுகள் G8 அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு செய்தன. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு G7 என்றானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்