TNPSC Thervupettagam

G7 உச்சி மாநாடு 2024

June 20 , 2024 160 days 534 0
  • இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் G7 குழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • G7 நாடுகளோடு சேர்த்து, இந்தியா, போப் பிரான்சிஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கும் 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • ஜோர்டான் மன்னர், பிரேசில், அர்ஜென்டினா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, அல்ஜீரியா, துனிசியா மற்றும் மௌரிடானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் புக்லியாவின் தெற்குப் பகுதியில் உள்ள போர்கோ எக்னாசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகியவை தங்களுக்கு இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக 10 ஆண்டு காலப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட முதல் போப்பாண்டவர் என்ற ஒரு பெருமையை வாடிகன் தலைவர்போப் பிரான்சிஸ் பெற்றுள்ளார்.
  • G7 குழும நாடுகள் ஆனது, முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட இலாபம் மூலம் உக்ரைனுக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஒப்பந்தம் செய்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்