G-7 அமைப்பின் 44-வது மாநாடு அண்மையில் கனடா நாட்டின் க்யூபெக் நகரின் லா மல்பய்யே-வில் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கனடா மீதான சாடல் மற்றும் இவ்வமைப்பில் உள்ள அனைத்து நாடுகளாலும் கையெழுத்திடப்பட்ட, கூட்டு அறிக்கைக்கான தன்னுடைய ஆதரவினை திடீரென திரும்பப் பெறல் போன்றவற்றினால் இம்மாநாடானது முழுமையாக சீரற்ற நிலையில் முடிவடைந்துள்ளது.
மற்ற நாடுகளிடமிருந்து ட்ரம்பின் தனிமைப்படுத்தலால், G7 அமைப்பு G6 மற்றும் ஒன்று என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாடானது வர்த்தக வரி விதிப்பு பிரச்சனைகள் மீதான வேறுபாடு மற்றும் மீண்டும் இவ்வமைப்பில் இரஷ்யாவை சேர்த்து கொள்வதற்கான அழைப்பு ஆகியவற்றால் அதனுடைய நோக்கத்தை எட்டாது திசை மாற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் G7 மாநாட்டின் ஐந்து கருத்துருக்களாவன:
உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளிப்பு
உலகப் பாதுகாப்பு
எதிர்காலத்தின் வேலை வாய்ப்புகள்
பருவநிலை மாறுபாடு மற்றும் பெருங்கடல்கள்
G-7 அமைப்பின் நடப்பு தலைவராக கனடா உள்ளது. மேலும் கனடாவே 2018 ஆம் ஆண்டின் G7 மாநாட்டை நடத்தும் ஒருங்கிணைப்பு நாடும் ஆகும்.
2019-ஆம் ஆண்டிற்கான G-7 மாநாடானது பிரான்ஸ் நாட்டின் நவ்வெல்லே - அக்யூய்டெய்னின் (Nouvelle-Aquitaine) பியாராட்ஜ் (Biarritz) நகரில் நடைபெற உள்ளது. மேலும் அவ்வாண்டு G-7 அமைப்பின் தலைமைப் பொறுப்பு தானாக பிரான்சிடம் சென்றிடும்.
2017ஆம் ஆண்டிற்கான G7 மாநாடானது இத்தாலியால் நடத்தப்பட்டது.
G7 அமைப்பானது உலகின் மிக தொழிற்மயமான, வளர்ந்த மேம்பட்ட பொருளாதாரமுடைய 7 நாடுகளின் குழுவினை உள்ளடக்கிய அமைப்பாகும்.
G7 அமைப்பில் உள்ள ஏழு நாடுகளாவன
அமெரிக்கா
இங்கிலாந்து
கனடா
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
ஜப்பான்
இந்த நாடுகள் ஆண்டுதோறும் சந்திக்கின்றன. உலகின் முக்கிய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கின்றன.