G77+சீனா அமைப்பின் இரண்டு நாட்கள் அளவிலான உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் கியூபாவில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வின் கருத்துரு, “தற்போதைய மேம்பாட்டுச் சவால்கள்: அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் பங்கு” என்பதாகும்.
இந்த உச்சிமாநாட்டில் 47 விதிகள் கொண்ட ஹவானா இறுதிப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது பல்முனை உலகில், உலகின் தெற்கு நாடுகளை ஒரு சக்திவாய்ந்த பகுதியாக மாற்றுவதை வலியுறுத்துவதோடு, உலகின் தெற்கில் உள்ள அனைத்து நாடுகளும் புவிசார் அரசியல் சார்ந்தப் பிரிவினைகளுக்கு மத்தியில் வளர்ந்து வரும் நாடுகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியா உட்பட 134 உறுப்பினர்களாகக் கொண்ட G77 அமைப்பானது வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான குழுவாக உள்ளது.
சீனா இந்தக் குழுவுடன் அதிகளவில் இணைந்து பணியாற்றுவதால், இது G77 பிளஸ் சீனா என்று அழைக்கப் படுகிறது.
இக்குழுமம் உலக மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்கினையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
G77 அமைப்பானது 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட போது 77 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.