TNPSC Thervupettagam

G77+சீனா உச்சி மாநாடு

September 23 , 2023 430 days 284 0
  • G77+சீனா அமைப்பின் இரண்டு நாட்கள் அளவிலான உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் கியூபாவில் நிறைவடைந்தது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, “தற்போதைய மேம்பாட்டுச் சவால்கள்: அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் பங்கு” என்பதாகும்.
  • இந்த உச்சிமாநாட்டில் 47 விதிகள் கொண்ட ஹவானா இறுதிப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது பல்முனை உலகில், உலகின் தெற்கு நாடுகளை ஒரு சக்திவாய்ந்த பகுதியாக மாற்றுவதை வலியுறுத்துவதோடு, உலகின் தெற்கில் உள்ள அனைத்து நாடுகளும் புவிசார் அரசியல் சார்ந்தப் பிரிவினைகளுக்கு மத்தியில் வளர்ந்து வரும் நாடுகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்தியா உட்பட 134 உறுப்பினர்களாகக் கொண்ட G77 அமைப்பானது வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான குழுவாக உள்ளது.
  • சீனா இந்தக் குழுவுடன் அதிகளவில் இணைந்து பணியாற்றுவதால், இது G77 பிளஸ் சீனா என்று அழைக்கப் படுகிறது.
  • இக்குழுமம் உலக மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்கினையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • G77 அமைப்பானது 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட போது 77 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்