TNPSC Thervupettagam

G77 குழுவின் தலைமைப் பதவியில் பாலஸ்தீனம்

January 18 , 2019 2140 days 907 0
  • G77 குழுவின் தலைமைப் பதவியை எகிப்திய அரபுக் குடியரசிடமிருந்து பாலஸ்தீனம் கைப்பற்றி இருக்கின்றது.
  • பாலஸ்தீனத்தை G77 குழுவின் தலைமைப் பதவியில் 2019 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு அக்குழுவின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களால் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பாலஸ்தீனத்தை கூடுதல் சலுகைகள் மற்றும் உரிமைகள் வைத்துக் கொள்ளச் செய்திடும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்து உள்ளது.
  • பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு கிடையாது. ஆனால் அது வாடிகன் புனித நகரத்தைப் போன்று உறுப்பினரல்லாத பார்வையாளர் தகுதியைப் பெற்றிருக்கின்றது.
  • G77 என்பதின் தலைமைப் பதவி (ஆப்பிக்கா, ஆசிய பசிபிக், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகியவற்றுக்கு இடையே) புவியியல் ரீதியான சுழற்சி முறையின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது. தேர்ந்தெடுக்கப்படும் நாடு இப்பதவியில் ஒரு வருடத்திற்கு நீடிக்கும்.
  • G77 என்பது ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள (சீனா உள்பட) 134 வளரும் நாடுகளின் ஒரு கூட்டணியாகும்.
  • ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியின் மீதான மாநாட்டில் (United Nations Conference on Trade and Development - UNCTAD) 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி 77 நாடுகளின் கூட்டுத் தீர்மானம் மூலமாக G77 உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்