TNPSC Thervupettagam

G77 + சீனா மூன்றாவது தெற்கு உச்சி மாநாடு 2024

February 1 , 2024 298 days 445 0
  • 3வது தெற்கு உச்சி மாநாடு உகாண்டாவின் கம்பாலா நகரில் நிறைவடைந்தது.
  • இந்த மாநாட்டில், ஏறக்குறைய 100 நாடுகளின் உயர்நிலைப் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
  • "ஒருவரும் விடுபட்டு விடக் கூடாது" என்ற கருத்துருவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
  • வர்த்தகம், முதலீடு, நிலையான மேம்பாடு, பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் எண்ணிமப் பொருளாதாரம் ஆகிய துறைகளில் தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தெற்கு உச்சி மாநாடு ஆனது, 77 (G77) நாடுகளின் குழுமத்தின் உயர்நிலை முடிவெடுக்கும் அமைப்பாகும்.
  • இது 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறுவப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, சீனா நாடானது, "G77 மற்றும் சீனா" முன்னெடுப்பு மூலம் G77 அமைப்புடன் ஒருங்கிணைத்து ஒத்துழைப்பினை நல்கி வருகிறது.
  • இது G77+சீனா என்ற அடையாளத்தைப் பேணினாலும், இந்தக் குழு தற்போது 134 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்