G77 குழுவின் தலைமைப் பதவியை எகிப்திய அரபுக் குடியரசிடமிருந்து பாலஸ்தீனம் கைப்பற்றி இருக்கின்றது.
பாலஸ்தீனத்தை G77 குழுவின் தலைமைப் பதவியில் 2019 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு அக்குழுவின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களால் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பாலஸ்தீனத்தை கூடுதல் சலுகைகள் மற்றும் உரிமைகள் வைத்துக் கொள்ளச் செய்திடும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்து உள்ளது.
பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு கிடையாது. ஆனால் அது வாடிகன் புனித நகரத்தைப் போன்று உறுப்பினரல்லாத பார்வையாளர் தகுதியைப் பெற்றிருக்கின்றது.
G77 என்பதின் தலைமைப் பதவி (ஆப்பிக்கா, ஆசிய பசிபிக், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகியவற்றுக்கு இடையே) புவியியல் ரீதியான சுழற்சி முறையின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது. தேர்ந்தெடுக்கப்படும் நாடு இப்பதவியில் ஒரு வருடத்திற்கு நீடிக்கும்.
G77 என்பது ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள (சீனா உள்பட) 134 வளரும் நாடுகளின் ஒரு கூட்டணியாகும்.
ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியின் மீதான மாநாட்டில் (United Nations Conference on Trade and Development - UNCTAD) 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி 77 நாடுகளின் கூட்டுத் தீர்மானம் மூலமாக G77 உருவாக்கப்பட்டது.