TNPSC Thervupettagam
January 3 , 2021 1348 days 744 0
  • தடுப்பூசிகள் மற்றும் நோய்த் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியால் (GAVI - Global Alliance for Vaccines and Immunisation) மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் GAVI வாரியத்தில் ஒரு உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு வேண்டி பரிந்துரைக்கப் பட்டு உள்ளார்.
  • அவர் GAVI வாரியத்தில் தென்கிழக்குப் பகுதி பிராந்திய அலுவலகம் (SEARO - South East Area Regional Office) / மேற்கு பசிபிக் பிராந்திய அலுவலகம் (WPRO - Western Pacific Regional Office) ஆகிய பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவுள்ளார்.
  • இவர் மியனாமரின் மின்ட்ஹிட்வி என்பவருக்குப்  பின்னர் இப்பதவியில் அமர்வார்.
  • இவர் இந்தப் பதவியை 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வகிப்பார்.
  • டாக்டர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • GAVI என்பது 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இது பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி ஆகும்.
  • “அனைவருக்குமான நோய்த் தடுப்பு” என்ற நோக்கத்தை அடைய இது செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்