- அமெரிக்கா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மன்றத்தின் (GCTF - Global Counter Terrorism Forum) கீழ் GCTF தீவிரவாத பயண முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன.
- இந்த புதிய முன்முயற்சியானது தீவிரவாதிகள் இணைந்துப் பயணிப்பதை தடுக்கும் நோக்கம் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு அவைத் தீர்மானம் 2396-க்கு வலுசேர்க்கும்.
- தீவிரவாதிகளைக் கண்டறிதல் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் தீவிரவாதிகளின் பயணத்தைக் கண்டறிதல் மற்றும் தீவிரவாதிகளை தடை செய்தல் ஆகியவற்றிற்கான திறன்களை மேம்படுத்த முடியும்.
சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மன்றம்
- சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மன்றம் என்பது 29 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் அரசியலற்ற, பன்முகத்தன்மை வாய்ந்த தீவிரவாத எதிர்ப்புத் தளமாகும்.
- இது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று நியூயார்க்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.