இந்தியாவின் கடன் சுமை மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நல்வாழ்வை நிர்வகிக்கும் இந்தியாவின் திறனை மதிப்பிடுவதில் இந்தியாவின் கடன்- GDP விகிதம் ஓர் அடிப்படை பொருளாதார அளவீடு ஆகும்.
இது நிதிசார் பாதிப்பு மற்றும் பெருமளவில் குறைக்கப்பட்ட நிதி நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஆனது 2024-25 ஆம் நிதியாண்டில் 44.1 விகிதத்துடன் அதிக கடன் - GDP விகிதத்தைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் (42.5) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (40.8) ஆகியவை உள்ளன.
26.4% கடன்- GDP விகிதத்துடன் தமிழ்நாடு 19வது இடத்தில் உள்ளது.