TNPSC Thervupettagam

GDP அடிப்படை ஆண்டு மாற்றம்

December 8 , 2024 14 days 80 0
  • 2011-12 ஆண்டிற்குப் பதிலாக 2022-23 ஆம் ஆண்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தொகுப்பிற்கான அடிப்படை ஆண்டாக மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்து உள்ளது.
  • இதற்காக பிஸ்வநாத் கோல்டர் என்பவரின் தலைமையில் சுமார் 26 பேர் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டதோடு இந்தக் குழுவானது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த நடவடிக்கையினை நிறைவு செய்யும் என்று நன்கு எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2011-12 ஆம் ஆண்டு அறிக்கைத் தொடரின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவு ஆனது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது.
  • தேசிய வருமானத்தின் முதல் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளானது, மத்தியப் புள்ளியியல் அமைப்பினால் (CSO) 1948-49 ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்டு அடிப்படை ஆண்டு விலையில் தயாரிக்கப்பட்டன.
  • நிலையான/ அடிப்படை ஆண்டு (1948-49) விலைகளிலான இந்த மதிப்பீடுகள் ஆனது, நடப்பாண்டு விலைகளின் தொடர்புடைய மதிப்பீடுகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கணக்குகள் 1956 ஆம் ஆண்டில் 'தேசிய வருமான மதிப்பீடுகள்' என்ற அறிக்கையில் வெளியிடப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்