GDP - கடன் விகிதத்தை 2031 ஆம் ஆண்டிற்குள் சுமார் 50 சதவீதமாகக் குறைக்கும் மத்திய அரசின் ஒரு திட்டத்தினை மத்திய நிதிநிலை அறிக்கைக் குறிப்பிட்டுக் காட்டி உள்ளது.
இது நடவடிக்கையின் முழுமை சார்ந்த இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட, மதிப்பிடக் கூடிய அளவிலான இலக்கினை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
GDP மற்றும் கடன் விகிதம் ஆனது ஒரு நாட்டின் நிதி வளத்தினைக் குறிப்பதற்கு என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குறிகாட்டியாகும்.
இந்திய மத்திய அரசின் GDP மற்றும் கடன் விகிதம் ஆனது சரியான வரம்பில் உள்ளது.
கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளைத் தவிர, G7 அமைப்பின் அதன் சக உறுப்பினர் நாடுகளுடன் ஒப்பிடச் செய்யும் போது, இந்தியாவின் GDP மற்றும் கடன் விகிதம் ஆனது குறிப்பிடத் தக்க அளவில் குறைவாக உள்ளது.