TNPSC Thervupettagam

GEAC உறுப்பினர்களுக்கான புதிய விதிகள்

January 7 , 2025 8 days 62 0
  • மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிற்கு (GEAC) தொழில்நுட்ப நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகளை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
  • இது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் மரபணு ரீதியாக மாற்றப் பட்ட (GM) விதைகள் குறித்த ஒழுங்குமுறைகளுக்கான உயர் மட்டத் தொழில் நுட்ப அமைப்பாகும்.
  • தற்போது இந்தப் புதிய விதிகளின் கீழ், ஒரு "நிபுணத்துவ உறுப்பினர்" அவர்களின் கடமைகளுடன் முரண்படக்கூடிய "சொந்த தகவல்களை" வெளிப்படுத்த வேண்டும்.
  • எந்தவொரு விருப்பம் சார் முரண்பாடும் GEAC குழுவின் எந்த முடிவையும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு நிபுணர் எடுக்க வேண்டும்.
  • குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப் படும் ஒரு விவகாரத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்ட ஒரு நிபுணர் உறுப்பினர், அந்தக் கூட்டத்திற்கு முன்னதாக அது குறித்து வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்