TNPSC Thervupettagam
February 1 , 2018 2491 days 816 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது அரசு மின் சந்தையின் (Gem 3.0 – Government e-market place) 3-வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • Gem-ன் இந்த புதிய பதிப்பானது தரப்படுத்தப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட அட்டவணை மேலாண்மையையும் (Standardised and Enriched Catalogue Management), ஆற்றல் வாய்ந்த தேடுபொறியையும், பயன்பாட்டாளர்களுக்கு மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு வசதியையும் (User rating) தர வல்லது.

Gem

  • பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் சரக்கு மற்றும் சேவை கொள்முதலை வசதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் சந்தை தளமே Gem ஆகும்.
  • இது இந்தியாவின் தேசிய கொள்முதல் இணைய வாயிலாக கருதப்படுகின்றது.
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தில், அளிப்பு மற்றும் விநியோகித்தலுக்கான பொது இயக்குநரகத்தின் (Directorate General of Supplies and Disposal) கீழ் இந்த இணைய வாயில் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்