மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது அரசு மின் சந்தையின் (Gem 3.0 – Government e-market place) 3-வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
Gem-ன் இந்த புதிய பதிப்பானது தரப்படுத்தப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட அட்டவணை மேலாண்மையையும் (Standardised and Enriched Catalogue Management), ஆற்றல் வாய்ந்த தேடுபொறியையும், பயன்பாட்டாளர்களுக்கு மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு வசதியையும் (User rating) தர வல்லது.
Gem
பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் சரக்கு மற்றும் சேவை கொள்முதலை வசதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் சந்தை தளமே Gem ஆகும்.
இது இந்தியாவின் தேசிய கொள்முதல் இணைய வாயிலாக கருதப்படுகின்றது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தில், அளிப்பு மற்றும் விநியோகித்தலுக்கான பொது இயக்குநரகத்தின் (Directorate General of Supplies and Disposal) கீழ் இந்த இணைய வாயில் செயல்படுகின்றது.